எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத 6 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் பணி இடைநீக்கம்
செய்யப்பட்டனர்.
மேலும் அந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதி மறுப்பு
தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6 மாணவ-மாணவிகளுக்கு வருகை பதிவு குறைவாக உள்ளது என்று காரணம் கூறி தமிழ் முதல் தாள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை கண்டித்து கடந்த 19-ந்தேதி தேர்வு எழுத மறுக்கப்பட்ட மாணவ-மாணவிகளும்,
அவர்களின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் மாணவர்களின்
பெற்றோர்கள், தலைமை ஆசிரியை பட்டுஷீலா அற்புதராணியிடம் தேர்வு எழுத அனுமதி
மறுத்தது குறித்து வாக்குவாதம் செய்தனர்.மேலும் அந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதி மறுப்பு
தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6 மாணவ-மாணவிகளுக்கு வருகை பதிவு குறைவாக உள்ளது என்று காரணம் கூறி தமிழ் முதல் தாள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட கல்வி அலுவலர் ரெங்கராஜன், பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடமும், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பணி இடைநீக்கம்
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத 6 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி மறுத்த தலைமை ஆசிரியை பட்டுஷீலா அற்புதராணி மற்றும் மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் ஆனந்தன், அறிவியல் செய்முறை ஆசிரியர் பரமநாதன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ரெங்கராஜன் நேற்று உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட 6 மாணவ- மாணவிகளும் நாளை (இன்று) நடைபெறும் தமிழ் 2-ம் தாள் தேர்வையும், இதர தேர்வுகளையும் எழுத அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.