தமிழ்நாடு முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர்
வள்ளிக்கண்ணு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர்களை பணி இடைநீக்கம்
செய்யப்படுவார்கள் என்ற தேர்வுத்துறை இயக்குனரின் ஆணை தேர்வுப்பணியில்
ஈடுபட்டுள்ள 30 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை அச்சமடைய வைத்துள்ளது.
மாணவ-மாணவிகளை உடல் ரீதியாக சோதிக்கக்கூடாது என்று விதி உள்ளது. மாணவர்கள்
மறைத்துவைத்து காப்பி அடிக்கிறார்கள்.
மாணவர்கள் காப்பி அடித்தால் அவர்கள்
செய்யும் தவறுக்கு அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்வது
இயற்கை நியதிக்கு புறம்பானது. எனவே இந்த ஆணையை திரும்ப பெறவேண்டும். இதை
வலியுறுத்தி 26-ந்தேதி விடைத்தாள் திருத்தும் பணியை ஒருமணி நேரம்
புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.