தொடர் போராட்டம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்ற பட்டதாரிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 7 பேர் சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே 3 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகு தினமும் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் கூடி சாலை மறியல் போராட்டம் நடத்துகிறார்கள்.
கைது-விடுதலை
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன், உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கிய ரவீந்திரன், முகேஷ்ராவ் ஆகியோர் போலீஸ் படையுடன் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்சொன்னார்கள். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.
இதனால் சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் வேனில் ஏற மறுத்து மாற்றுத்திறனாளிகள் போராடினார்கள். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதானவர்கள் திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.








