பார்வையற்ற பட்டதாரிகள்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவரையும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
150 பேர் கைது
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும், அவர்கள் சாலைமறியலை கைவிடவில்லை. அதன்பின்னர், போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் பட்டினம்பாக்கத்தில் உள்ள மீனவர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். இந்த சாலைமறியல் மட்டும் அல்லாது கடந்த 4 நாட்களாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 7 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நேற்று மாலை உண்ணாவிரதம் இருந்த சக்திவேல்(34), வில்லுவநாதன்(29), ரவிச்சந்திரன்(27), கருப்பச்சாமி(32), செல்வமணி(35), அரவிந்த்(25), சுப்பிரமணி(35) ஆகிய 7 பேரையும் போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவர்கள் எந்தவித சிகிச்சையும் எடுக்க மாட்டோம் என்று தொடர்ந்து மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.








