சாலை மறியல்
பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்டோர் கைது
இந்த சாலை மறியலால் சுமார் 30 நிமிடம் அந்த பகுதிகளில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் வழியாக அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமப்பட்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க நிர்வாகி ராஜா என்பவர் கூறும்போது, ‘9 அம்ச கோரிக்களை வலியுறுத்தி நாங்களும் கடந்த 9-ந் தேதியில் இருந்து பல்வேறு இடங்களில் சாலை மறியல், போராட்டம், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு இன்னும் எங்களுடைய கோரிக்கை குறித்து எந்த வித முடிவையும் தெரிவிக்கவில்லை. வருகிற திங்கட்கிழமை (நாளை) முதல் பார்வையற்ற பெண் பட்டதாரிகள் 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர இருக்கிறார்கள்’ என்றார்.








