அடுத்த தலைமுறைக்கு மாறும் தொலைபேசி இணைப்புகள்: என்.கே.குப்தா தகவல்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அடுத்த தலைமுறைக்கு மாறும் தொலைபேசி இணைப்புகள்: என்.கே.குப்தா தகவல்:

தமிழகத்தில் முதல் கட்டமாக 55 ஆயிரம் தரைவழித் தொலைபேசி இணைப்புகள் அடுத்த தலைமுறை வலையமைப்புக்கு மாற்றம் செய்யப்படுகின்றன என, வாடிக்கையாளர் பிரிவின் (செல்லிடப்பேசி, இணையம்) இயக்குநர் என்.கே.குப்தா தெரிவித்தார்.
சென்னையில் துறைமுகம் இணைப்பகத்தில், தென் இந்தியாவின் முதல் இணையதள தகவல் தொகுப்பு விவர மையத்தைத் தொடக்கி வைத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை துறைமுகம் பி.எஸ்.என்.எல் இணைப்பகத்தில், தென் இந்தியாவின் முதல் இணையதள தகவல் தொகுப்பு விவர மையம் தொடங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம், கன்ட்ரோல்எஸ் (ஸ்ரீற்ழ்ப்ள்) என்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.
இந்த மையம் 40 ஆயிரம் சதுர அடியில் தொடங்கப்பட்டுள்ளது. இது உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள், இதுவரை தங்கள் நிறுவனம் சார்ந்த தகவல் தொகுப்புகளை தாங்களாகவே அதிக செலவு செய்து நிர்வகித்து வந்தனர். இனி வரும் காலங்களில், பி.எஸ்.என்.எல். உதவியுடன் இந்த மையம் மூலம் குறைந்த செலவில், மத்திய, மாநில அரசுத் துறைகள், பெரிய, சிறிய நிறுவனங்கள் தங்களின் துறைச் செயல்பாட்டை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
ஆயிரம் கோடி: பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கும் சேவைகளில் சாதாரண தொலைபேசி (கஹய்க்ப்ண்ய்ங்) முக்கிய இடம்பெறுகிறது. அண்மைக் காலமாக, இந்தச் சேவையை அதிகமானோர் திரும்ப ஒப்படைத்து(நன்ழ்ழ்ங்ய்க்ங்ழ்) வருகின்றனர்.
இதன் காரணமாக, அதிக வருவாய், வாடிக்கையாளர்கள் இழப்பைச் சந்திக்கும் நிலைக்கு பி.எஸ்.என்.எல் தள்ளப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, புதியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போதுள்ள தரைவழி தொலைபேசி தொழில்நுட்பத்தை, அடுத்தத் தலைமுறை வலையமைப்புக்கு (சங்ஷ்ற் எங்ய்ங்ழ்ஹற்ண்ர்ய் சங்ற்ஜ்ர்ழ்ந்) மேம்படுத்தும் திட்டமாகும்.
நாடு முழுவதும் இந்தத் திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் கட்டமாக பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை போன்ற பெரு நகரங்களில் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த தலைமுறை வலையமைப்புக்கு மாறும் தொலைபேசி வாடிக்கையாளர்கள், ஒலி, ஒளி, தகவல் பரிமாற்றம் போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பெற முடியும்.
அதாவது "ஸ்கைப்' சேவையில் வழங்கப்படும் அனைத்து விதமான வசதிகளும், பி.எஸ்.என்.எல். ஸ்கைப்பிலும் கிடைக்கப்பெறும். தமிழக தொலைபேசி வட்டத்தில், முதல் கட்டமாக 55 ஆயிரம் தொலைபேசி வாடிக்கையாளர்கள் அடுத்த தலைமுறை வலையமைப்புக்கு மாற்றப்படவுள்ளனர். அதைத் தொடர்ந்து 1 லட்சம் பேர் மாற்றப்படுவர். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக தொலைபேசி வட்டத்துக்கு, இந்தத் திட்டத்துக்கென ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"கை-மெய்' (ரண்-ச்ண்) வசதி: நாடு முழுவதும் 14 சுற்றுலா பகுதிகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கம்பியில்லா இணைய வசதி (ரண்-ச்ண் ஊஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த வசதியை மகாபலிபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகிய இடங்களில் பெற முடியும். நிகழாண்டின் மே மாதத்தின் இறுதியில் இந்த சேவை முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும் என்றார் என்.கே.குப்தா.
தமிழக தொலைபேசி வட்ட தலைமைப் பொது மேலாளர் ஜி.வி.ரெட்டி, சென்னை தொலைபேசி வட்ட தலைமைப் பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உடனிருந்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H