பெண்கள் பாதுகாப்புக்கு புதிய மென்பொருள்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பெண்கள் பாதுகாப்புக்கு புதிய மென்பொருள்!

பெண்களின் பாதுகாப்புக்காக புதிய மென்பொருளை புதுவை மத்தியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியையும், மாணவரும் வடிவமைத்துள்ளனர்.பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதனிடையே, ஆபத்துக் காலங்களில் பெண்கள், செல்லிடப்பேசி மூலம் உடனே தகவல் பரிமாற்றம் செய்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான மென்பொருள்களை பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் உருவாக்கி வருகின்றனர்.
 இதேபோல், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியை சிவசத்யா, மூன்றாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவர் ஜெயராஜ் ஆகிய இருவரும் இணைந்து "மித்ரா' என்ற புதிய மென்பொருளை வடிவமைத்துள்ளனர்.
 புதுவை பகுதிக்கு என பிரத்யேகமாக இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 மித்ரா (ஙர்க்ஷண்ப்ங் ஐய்ண்ற்ண்ஹற்ங்க் பழ்ஹஸ்ரீந்ண்ய்ஞ் ஹய்க் தங்ள்ஸ்ரீன்ங் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்-ஙஐபதஅ) என்ற ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் செல்லிடப்பேசி பயன்பாட்டு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து இணைப் பேராசிரியை சிவசத்யா கூறியதாவது: மித்ரா மென்பொருளை உருவாக்க எங்களுக்கு 6 மாதங்கள் ஆனது. தற்போது புதுவைப் பகுதிக்கு மட்டும் என இதை உருவாக்கி உள்ளோம். ஆபத்துக் காலத்தில் ஒருவரால் உடனே செல்லிடப்பேசியை இயக்கவோ, மென்பொருளை இயக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ முடியாது.
 அந்நேரத்தில் செல்லிடப்பேசியின் ஒலி பட்டனை நீண்ட நேரம் அழுத்தியபடி இருப்பின் மித்ரா மென்பொருள் அருகே உள்ள காவல் நிலையத்துக்கும், மித்ராவில் பதிவு செய்யப்பட்டுள்ள 3 நண்பர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கும் ஆபத்துக் கால குறுஞ்செய்தியை அனுப்பும்.
 மேலும், புதுவையில் உள்ள காவல் நிலையங்கள், அவற்றின் தொலைபேசி எண்கள், தொண்டு நிறுவனங்கள், உதவி மையங்கள் போன்றவை குறித்தும் மித்ரா மென்பொருள் தெரியப்படுத்தும்.
 தெரியாமல் ஒரு பெண் ஒலி பட்டனை அழுத்தி விட்டாலும், மீண்டும் அழுத்துவதின் மூலம் அதைத் தடுக்கலாம். இணையதள இணைப்பு இல்லாத செல்போனிலும் மித்ராவை பயன்படுத்தலாம். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடனும் பேசி உள்ளோம். இலவச மித்ரா மென்பொருள் தொடர்பான விவரங்களை எங்கள் பல்கலைக்கழக இணையதளம்
 ஜ்ஜ்ஜ்.ல்ர்ய்க்ண்ன்ய்ண்.ங்க்ன்.ண்ய்-ல் அறிந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றார்.
 மென்பொருள் அறிமுகம்: இதனிடையே புதுவை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்த உலக மகளிர் தின விழாவில், மித்ரா மென்பொருளை துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். பெண்ணியல் படிப்பு மையத் தலைவர் ஆர்.நளினி, மகளிர் நலக்குழுத் தலைவி ஜி.சந்திரிகா, இயக்குநர் இந்துமதி, ஒலாந்திரியேத் சமூக அமைப்பு நிறுவனர் மாம்டிபிலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H