பிளஸ்-2 வேதியியல் மற்றும் அக்கவுண்டன்சி ஆகிய 2 தேர்வுகள் நேற்று
நடைபெற்றன. வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக மொத்தம் 38 மாணவர்கள்
பிடிபட்டனர்.
சென்னை, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு
மாணவர் பிடிபட்டனர். வேலூர் மாவட்டத்தில் 18 மாணவர்களும், கடலூர்
மாவட்டத்தில் 9 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேரும், தேனி, சேலம்
ஆகிய மாவட்டங்களில் தலா 2 மாணவர்களும் பிடிபட்டனர்.
அக்கவுண்டன்சி தேர்வில் காப்பி அடித்ததாக மொத்தம் 24 பேர் பிடிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேரும், கடலூர் மாவட் டத்தில் 6 பேரும்,
திருவள்ளூர், கோவை, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு
மாணவரும் காப்பி அடித்ததாக பிடிபட்டனர்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.