சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
4 புதிய துறைகள்
அதுபோல சென்னை பல்கலைக்கழகத்தில் புதிதாக நீர் மேலாண்மை, உளவியல் கலந்தாய்வுத்துறை, அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்கும் துறை உள்பட 4 துறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அந்த துறைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதிகொடுத்த உடன் அந்த துறைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு துறைக்கும் ஒரு பேராசிரியர், 1 கூடுதல் பேராசிரியர், 2 விரிவுரையாளர்கள் ஆகியோர் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். மொத்தத்தில் 16 பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்காக ரூ.35 கோடி செலவு ஆகும்.
ஆன்லைன் மூலம் தேர்வு
தொலைதூர கல்வியை பொறுத்தவரை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தல், இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுதல், தேர்வு முடிவு வெளியிடுதல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இணையதளமாக்கப்பட்டுள்ளன.
இனிமேல் தொலைதூர கல்வியில் ஆன்லைனில் தேர்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதனால் விடைத்தாள் தேவை இல்லை. மை கொண்டும் எழுதவேண்டியதில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு பேராசிரியர் ஆர். தாண்டவன் தெரிவித்தார்.








