சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் தொன்மையான நாணயங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பள்ளிக்குழுத் தலைவர் ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர்
டி.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். பள்ளிக்குழுச் செயலர் வி.ஹரிகிருஷ்ணன்
வரவேற்றார். ரோட்டரி சங்க அறக்கட்டளை தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக
முன்னாள் பேராசிரியருமான டாக்டர் எஸ்.நடனசபாபதி சிறப்பு விருந்தினராக
பங்கேற்ற கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முத்துவின் அரிய முயற்சியால்
சேகரிக்கப்பட்ட தொன்மையான நாணயங்கள் மற்றும் புகைப்படங்கள் கண்காட்சியில்
இடம் பெற்றிருந்தன. சங்காலம் முதல் மூவேந்தர்கள், நாயக்கர்கள் கால
வரையிலான நாணயங்களும், தற்கால நாணயங்கள் மற்றும் அயல்நாட்டு நாணயங்கள்
கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தமிழகத்தின் முக்கிய நகரங்களின் முந்தைய
நிலைகள், தேசத் தலைவர்களின் அரிய புகைப்படங்கள், தமிழர்களின்
வீரவிளையாட்டுகள் குறித்த புகைப்படங்களும், இந்தியாவின் பழமையான பத்திரிகை
புகைப்படங்கள், சங்க கால அரிய படிமங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்
பெற்றிருந்தன. கண்காட்சியை பெற்றோர்கள், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.








