பெருமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க தமிழை, அடுத்த தலைமுறைக்கு
எடுத்துச் செல்லும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், அரசு பள்ளியில்
படிக்கும் ஏழை குழந்தைகள்தான்" என, நாமக்கல்லில் நடந்த விழாவில், சென்னை
அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் பேசினார்.
நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில், நம்பிக்கை இல்ல கட்டட அடிக்கல்
நாட்டு விழா நடந்தது. ஏட்டுக்கல்விவிழாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
பேசியதாவது: இந்த நம்பிக்கை இல்லம், ஏட்டுக்கல்வி மட்டும் சொல்லி
கொடுக்கப்படும் என்ற நிலையை மாற்றி, பல கலைகளையும் கற்றுத்தரும் என்ற
நம்பிக்கை உள்ளது. இங்குள்ள குழந்தைகளுக்கு ஆற்றல் கற்றுக் கொடுக்கப்படும்.
ஏன், ஐ.ஏ.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், அவர்கள் தயார்
செய்யப்படுவர்.
தமிழ் பிள்ளைகள் தரம் தாழ்ந்து விடவில்லை என்பதை, இம்மாணவர்கள் மூலம்
நிரூபிக்கப்படும். அதற்கு இந்த நம்பிக்கை இல்லம் தளம் அமைக்கும்.
சில அரசு அதிகாரிகள், எதையோ எதிர்பார்த்துள்ளனர். லஞ்சத்தை எதிர்க்க,
இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். தமிழை யார் வளர்த்துக்
கொண்டிருக்கின்றனர்... கவிஞர்களா, எழுத்தாளர்களா, பேச்சாளர்களா, தலைவர்களா,
தமிழ் ஆசிரியர்களா, இல்லை. பெருமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க தமிழை,
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உன்னதப் பணியில்
ஈடுபட்டிருப்பவர்கள், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள்தான்.
சினிமா நடிகர்கள், விவசாயிகளுக்கு ஈடானவர்கள் கிடையாது
நம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாக தமிழ்
குழந்தைகள் உள்ளனர். நம்பிக்கை, எல்லா இடத்திலும் கொட்டிக் கிடக்கிறது.
தமிழர்கள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர். எந்த மொழியையும்
எதிர்க்கவில்லை. தொன்மையும், பெருமையும் மிக்க தமிழ் மொழியை போற்றி
பாதுகாக்க வேண்டும். பழக்கத்தை, பழக்கத்தால்தான் மாற்ற முடியும்.
சினிமா நடிகர்கள், விவசாயிகளுக்கு ஈடானவர்கள் கிடையாது. தமிழரின்
அடையாளமான வேட்டியை கட்டிக்கொள்ள தயங்குகின்றனர். நம் அடையாளத்தை உயர்த்தி
பிடிக்க, தயக்கம் காட்டுகின்றனர். வாழும்போது மனிதர்களாகவும், தன்மானம்
உள்ளவர்களாகவும் வாழ்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.