இந்தியாவின் மிகப்பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷனாக இருக்கும் தாஜ்மஹாலை மேம்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். உலக பாரம்பரிய சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலை தீவிரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க தாஜ் கன்ஞ்-ஐ சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணிநேரமும் சிசிடிவி கேமிராக்கள் வழியாக வீடியோ சர்வலைன்ஸ் செய்ய வேண்டும். அந்த பகுதியில் அன்றாட நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும. தாஜ்மஹாலின் வாயில்களில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஒருநேரத்தில் ஒருநபர் மட்டுமே செல்லக்கூடிய, அப்படி செல்லும் போது அந்த நபரை முழுவதுமாக ஸ்கேன் செய்யும் டேர்ன்ஸ்டைல் பாதுகாப்பு தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்வதற்காக வழக்கமாக வரும் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜீரோ-வேல்யூ டிக்கெட்டுகளை வழங்க வேண்டும். அதிக கூட்டமில்லாத சாதாரண நாட்களில் என்ட்ரன்ஸ் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும். ஏற்கனவே தாஜ்மஹாலின் முக்கிய பகுதிகளில் ரிலையன்ஸ் அமைத்துள்ள 4ஜி லைன்கள் மூலமாக வீடியோ கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணி்ப்பு மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த கடிதத்தை பார்வையிட்ட தொல்லியல் துறை உயரதிகாரி என்.கே.பதாக் விரைவில் இந்த ஆலோசனைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். கடந்த மாதம் 24-ந்தேதி மத்திய மந்திரி மகேஷ் சர்மா தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த பிறகு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.








