சேவை சட்டம்
மத்திய அரசு கடந்த 2011–ம் ஆண்டு பொது சேவை பெறும் உரிமை சட்டத்தை
இயற்றியது. இந்த சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் தங்களது பணியை குறிப்பிட்ட
காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். அதாவது பொதுமக்கள் தரும் கோரிக்கை
மனுவை, குறிப்பிட்ட நாட்களுக்குள் பரிசீலித்து, தகுந்து நடவடிக்கையை எடுக்க
வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்குள், கோரிக்கை மனுவை பரிசீலித்து
முடிவு எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு நாள் ஒன்று
ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
19 மாநிலங்கள்
இந்த சட்டத்தை கர்நாடகா, கேரளா, பீகார் உள்ளிட்ட 19 மாநிலங்கள்
தங்களது மாநிலத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு இது நாள் வரை
இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை. இந்த சட்டம் அமல்படுத்தினால், மாநிலத்தில்
லஞ்சம் மற்றும் ஊழல் நடைபெறாமல் போய் விடும். எனவே, இந்த சட்டத்தை
அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.
பரிசீலிக்க வேண்டும்
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பொது சேவை பெறும் உரிமை
சட்டத்தை தமிழக அரசு பிற மாநிலங்கள் போல், தங்கள் மாநிலங்களிலும்
அமல்படுத்த விரும்புகிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன்
உள்ளோம். மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு, இதுபோன்ற சட்டத்தை
அமல்படுத்துவது கடமையாகும். எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து
வருகிற ஏப்ரல் 20–ந் தேதிக்குள் முடிவு செய்து, இந்த ஐகோர்ட்டுக்கு
தெரியப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.







