வங்கியில் வீட்டுக்கடன் வாங்கும்போது முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்
பதிவுக்கான தொகையும் வீட்டுகடனில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ்
வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை சொந்தமாக வீடு
வாங்க காத்திருக்கும் நடுத்தர வருவாயினர் வரவேற்றுள்ளனர்.
சொந்தமாக
வீடு வாங்குபவர்கள் ^10 லட்சத்திற்குட்பட்ட தொகையை வங்கிகளில் கடனாக பெறும்
போது அந்த கடன் தொகையில் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக்கான
கட்டணம் ஆகியவை சேர்க்க முடியாது. இதனால், கடன் வாங்குபவர்கள் இதற்கான ஒரு
தொகையை தனியாக சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. சொந்தமாக வீடு
வாங்குபவர்கள் பலரும் இந்த குறையை சுட்டிகாட்டியும் மேற்படி இரு கட்டணத்
தொகையும் வங்கிக்கடனுடன் சேர்க்க வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை
விடுத்து வந்தனர்.
இதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும் கடந்த
இரு தினங்களுக்கு முன்பு இதற்கான நடைமுறைகளை எளிதாக்கி அதற்கான
அறிவிப்பையும் வெளியிட்டது.
அதன்படி, ^10 லட்சத்திற்குட்பட்ட
தொகைக்குள் வீடு வாங்குபவர்கள் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள்
செலவையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அந்த அறிவிப்பில்
குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ள எளிய நடைமுறை யின்
மூலம் மிக குறைந்த தொகையில் சொந்த வீடு வாங்குபவர்கள் பலருக்கு உதவியாக
இருக்கும். நடுத்தர வருவாயினருக்கும் இது வாய்ப்பாக அமையும் என்று கட்டுமான
துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்தனர்.நன்றி தினகரன்







