அறிவியல் புதுமை மாதிரி
கண்டுபிடிப்புகளுக்கு இந்திய உரிமம் பெறும் வரையில் மாணவர்கள் அறிவியல்
ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என, அறிவியல் தொழில்நுட்ப செயற்குழு இயக்குநர்
அய்யம்பெருமாள் கூறினார்.
சென்னை சரஸ்வதி வித்யாலயா தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கண்காட்சி வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெற்றது.கண்காட்சியை தொடக்கி வைத்து பி.அய்யம்பெருமாள் கூறியது:
பொதுவாக 4-லிருந்து 9 வயது வரையில் குழந்தைகள் கேள்விகள் கேட்கும்
மனப்பான்மையில் உள்ளனர். இந்த கேள்வி கேட்கும் மனப்பான்மை குழந்தைகளுக்கு
ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைகிறது. இதனை சரியாக
ஆசிரியர்கள் புரிந்து கொண்டு ஊக்கப்படுத்த வேண்டும்.
மேலும், மாணவர்கள்
விரும்பிய துறையில் பயில பெற்றோர்களும், ஆசிரியர்களும் சுதந்திரம் அளிக்க
வேண்டும். இது போன்ற சுற்றுச் சூழல் விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்கள்
உள்வாங்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகள் வளரும் இடமாக
இந்தியா விளங்கும். தமிழக அரசு "இன்ஸ்பயர்' எனும் திட்டத்தின் மூலம் சிறந்த
மாணவ அறிவியல் படைப்பாளிகளை உருவாக்கி வருகிறது. இதன்படி, 50,000
மாணவர்களின் சிறந்த அறிவியல் மாதிரிகளுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை
வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளநிலை,
முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.18,000 வரை அரசு
ஊக்கத்தொகை வழங்குகிறது. மேலும், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில்
தேர்ந்தெடுக்கும் சிறந்த அறிவியல் புதுமை மாதிரிகளுக்கு இந்திய உரிமம்
பெறும் வரையில் மாணவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்
என்றார் அவர்.
இதில் சரஸ்வதி வித்யாலயா தொடக்கப்பள்ளி வி.கந்தசுவாமி,
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப இணை இயக்குநர் எஸ்.
செüந்தராஜன்,வில்லிவாக்கம் தொடக்கப் பள்ளி கல்வி உதவி அலுவலர்
எம்.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








