Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு
உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய தொடர்
போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ்
பெறப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி நியமனத்துக்கான உத்தரவை வழங்க
வேண்டுமென பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் 10-ஆவது நாளாக புதன்கிழமையும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமைச் செயலகத்தில்... தங்களது கோரிக்கையை
வலியுறுத்தி, தலைமைச் செயலகம் எதிரே பார்வையற்ற மாற்றுத் திறனாளி
பட்டதாரிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை போலீஸார்
தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் தமிழக
அரசின் சார்பில் சமூகநலம்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சர்
பா.வளர்மதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பார்வையற்ற மாற்றுத்
திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகளில் 4 அம்ச கோரிக்கைகளை அரசுத் தரப்பில்
ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
தனியார் கல்லூரி, பள்ளிகளில் வேலைக்கு உத்தரவாதம்,
வேலையில்லாத பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட
கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னையிலும், திருச்சியிலும் கடந்த
10 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பார்வையற்ற
பட்டதாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர் போராட்டம்:
பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அனைத்து
மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது நாளாக
போராட்டத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடனும் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும்
எட்டப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு
உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தங்களின் போராட்டம் தொடர்வதாக ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








