தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் சுமார் ஆயிரத்துக்கு 4 பேர் பார்வையற்றோராக இருக்கின்றனர்.
அவர்களின் நலனில் அக்கரை கொண்டு செயல்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமை.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பார்வையற்றோர் தங்களது 9 அம்ச கோரிக்கைகளை
முன்னிறுத்தி போராடி வருகிறார்கள். குறிப்பாக பார்வையற்றோருக்கு தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு நடத்தவும், பார்வையற்றோர்
பள்ளிகளில் பூர்த்தி செய்யாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்,
அரசு பணியிடங்களில் அவர்களுக்கு உரிய சலுகைகள் முன்னுரிமைகள்,
இடஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு உரிமைகளுக்காகவும்
தொடர்ந்து போராடுகிறார்கள்.
காவல்துறை அவர்களது போராட்டத்தை தடுத்து நிறுத்த, அவர்களை தள்ளியும்,
இழுத்தும் அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல. எனவே
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரியில் படிக்கின்ற பார்வையற்ற
மாணவர்களையும், பட்டதாரிகளையும் மாநில அரசு பொறுப்போடு அழைத்து, மனிதாபிமான
அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை சிறப்பு கவனம்
கொண்டு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







