கல்விக் கடன் வாங்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்கள் கிரெடிட் ரெக்கார்டை நெகட்டிவ்வாகவே வைத்துள்ளனர். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். கிரெடிட் இன்பர்மேஷன் கம்பெனிகளும், வங்கிகளும் இதை கருத்தில் கொண்டு இளைஞர்களிடையே கடனை திருப்பிச் செலுத்தும் கலாச்சாரத்தை (credit culture) வளர்க்க வேண்டும். புதிய தலைமுறையினருக்கு கடனை வழங்கும் முன்னரே இதை பற்றி விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும். கடன் வழங்கும் விதிமுறைகளின்படி, ரூ.4 லட்சத்திற்கு கீழ் வழங்கப்படும் கல்விக்கடன்களில் 4 சதவீதம் மட்டுமே வராக்கடன் இருக்க வேண்டும். ஆனால், தற்போது வங்கிகளில் திரும்பச் செலுத்தப்படாத தொகை 7.54 சதவீதமாக உள்ளது. இதை குறைக்க கிரெடிட் இன்பர்மேஷன் கம்பெனிகள் அவ்வப்போது (periodic), கடன் அறிக்கையை (non-chargeable credit report) கடன் வாங்கியிருக்கும் மாணவர்களுக்கு அனுப்பி அவர்களது கடன் தொகையின் நிலையை (credit position) தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கடன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.
இவ்வாறு ஆர்.காந்தி தெரிவி்த்தார்.
ஏற்கனவே, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் வராக்கடன் சவால்களை அதிகமாக சந்தித்து வருவதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.








