சென்னை பெருநகரக் காவல் துறையில்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர்களை மீண்டும் பணி நியமனம்
செய்து ஆணையர் எஸ்.ஜார்ஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டஉத்தரவு:
சென்னை பெருநகரக் காவல் துறையின் காத்திருப்போர்
பட்டியலில் இருந்த ஆய்வாளர் இ.ஜெகந்நாதன் சேத்துப்பட்டு
குற்றப்பிரிவுக்கும், ஆய்வாளர் ஏ.ஜெ.ரவிக்குமரன், அண்ணா, எம்.ஜி.ஆர்.
நினைவிடங்களுக்கும், ஆய்வாளர் எஸ்.சிவசுப்பு, அண்ணா சாலை
குற்றப்பிரிவுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல சேத்துப்பட்டு குற்றப்பிரிவு ஆய்வாளர் என்.கண்ணன், மணலி புதுநகர் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர்கள் ஓரிரு நாள்களில் தங்களது புதிய பணியை ஏற்பார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.








