Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அடுத்த ஆண்டு டிசம்பரில் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்:
அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு
எடுத்துச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த ஆண்டு
டிசம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்
தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் தெரிவித்தார்.
சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை
நடைபெற்ற 24-ஆவது பட்டமளிப்பு விழாவில் கிரண்குமார் கலந்துகொண்டு,
மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார். அதன் பின்னர்
செய்தியாளரிடம் அவர் பேசியது:
பேரிடர் மேலாண்மை குறித்து 3 செயற்கை கோள்கள் விரைவில்
விண்ணில் செலுத்தப்பட உள்ளன. மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை
விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தயார்
செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற
சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்தக் கட்ட சோதனை
மகேந்திரகிரியில் நடைபெறும். இறுதியாக அடுத்த ஆண்டு டிசம்பரில் விண்ணில்
ஏவப்படும் என்றார்.
சந்திராயன் -2 செயற்கைக்கோள் தயார் செய்யப்பட்டு
வருகிறது. 2017 அல்லது 2018-க்குள் சந்திரனுக்கு ஏவப்படும் என்றார்
கிரண்குமார். முன்னதாக சக்தி மசாலா இயக்குநர் துரைசாமி, நடிகர் விவேக்
உட்பட 98 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் கிரண் குமார். இதேபோல 45
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம்,1878
மாணவ-மாணவிகளுக்கு இளநிலை பட்டச் சான்று, 777 மாணவ-மாணவிகளுக்கு முதுநிலை
பட்டச் சான்றை கிரண்குமார் வழங்கினார்.
விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், நிர்வாக இயக்குநர்கள் மரியஜீனா ஜான்சன், மரிய ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








