மழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் பாலு சரவண சர்மா கூறியதாவது:பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் நடுவில், சூரியன் பயணிக்கும் காலம், இந்திய தீபகற்பத்தின் வெப்ப காலம்.
நடப்பு ஆண்டில், மே, 5ம் தேதி அதிகாலை, 2:23 மணிக்கு, அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. 29ம் தேதி, காலை, 7:14 மணிக்கு, முடிகிறது.'கத்திரி' காலம், மே, 11ம் தேதி இரவு, 11:47 மணிக்கு துவங்கி, மே, 25ம் தேதி, இரவு, 7:54 மணிக்கு முடிகிறது.நடப்பு ஆண்டில், புதன் - சுக்கிரன் சமீபத்தில் இருப்பதால், அக்னி நட்சத்திர காலத்தில், வெயிலின் தாக்கம் குறைவாக வே இருக்கும். கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.ஜூன், முதல் வாரத்தில், வெயிலின் உக்கிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
40 டிகிரி செல்சியஸ்
தமிழகத்தில், மே மாதத்தில், சராசரியாக, அதிகபட்சம் 40 டிகிரி செல்சியஸ் வெயிலே பதிவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, அதிகபட்ச மாக, 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
எனவே, இதோடு ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கம் குறைவாக வே இருக்கும்.
அக்னி நட்சத்திர காலத்தில், பூமி பூஜை, கிரக ஆரம்பம், கிணறு வெட்டுதல், மரம் நடல், மொட்டை அடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.








