அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் 8,945 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை மருத்துவத் துறையில் உள்ள
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது தொடர்பாக திமுக, மார்க்சிஸ்ட்,
இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு
தீர்மானம் கொண்டு வந்தன.
இதற்கு பதில் அளித்து விஜயபாஸ்கர் கூறியது:-
மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகின்றன.
அதிமுக ஆட்சியில் இதுவரை 8,945 பேர் பணியில்
நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.டி படித்த மருத்துவர்களின் விவரங்கள் நேரடியாக
ஆன் லைன் மூலம் பெறப்பட்டு, அவர்களுக்கு வேண்டிய இடங்களில் பணி நியமனமும்
செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 433 சிறப்பு மருத்துவர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,463 நர்சுகளை நியமிக்க அரசு
முடிவெடுத்துள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.








