எனவே, இனி எந்த ஒரு இன்வைட், ஹேக் மற்றும் டுவீக்ஸூம் இல்லாமல் வாட்ஸ் ஆப் ரசிகர்கள் வாய்ஸ் காலிங் செய்யலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இன்னும் கூட பழைய வெர்ஷனே உள்ளது. ஆகையால், நாம் வாட்ஸ் ஆப் வெப்சைட்டிலிருந்து APK ஃபார்மட்டில் (Version 2.12.19) லேட்டஸ்ட் வெர்ஷனை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ஸ் காலிங் சேவைகளை வழங்கி சோதித்து பார்த்த பிறகு, தற்போது பரவலாக அனைவருக்கும் இண்டர்நெட் காலிங் வசதியை வழங்க துவங்கியுள்ளது வாட்ஸ் ஆப். வாய்ஸ் காலிங் வசதியை ஆக்டிவேட் செய்துள்ள ஆண்ட்ராய்டு பயனாளர்கள் ஏற்கனவே அந்த வசதியை ஆன் செய்து வைத்துள்ளவர்களிடமிருந்து ஒரு அழைப்பை ரிசீவ் செய்ய வேண்டியது முக்கியம். ஆனால், இந்த இன்வைட் சிஸ்டம் எல்லாவித மொபைல்களிலும் வேலை செய்வதில்லை. இப்போதைய நிலவரப்படி, விண்டோஸ் மற்றும் ஐபோன் ஹேண்ட்செட்டுகளில் இது வேலை செய்யாது.








