தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தால் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில்
பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு சரிவர கிடைப்பதில்லை. போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள ஊழியர்களை அடக்கு முறையில் தடுத்து நிறுத்தாமல் அரசு முறையாக
அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். மேலும் அவர்கள்
தொடர்ந்து வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், சாலை மறியல், சிறை செல்லுதல் போன்ற
போராட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
எனவே அவர்களது தொடர் போராட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து
நல்ல முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இன்றைய விலைவாசி ஏற்றம்,
பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நியாயமாக வழங்கப்பட
வேண்டிய ஊதியம் உள்பட அனைத்து கோரிக்கைகளையும் ஊழியர் சங்கப்
பிரதிநிதிகளுடன் தமிழ அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு
கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.