Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆயுஷ் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க எதிர்ப்பு:
இந்திய முறை மருத்துவர்களுக்கான
காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்
நிரப்புவதற்கு ஆயுஷ் மருத்துவர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்துப்
பணியிடங்களையும் நிரப்பவதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்
தொடங்கப்பட்டது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை
மருத்துவம் ஆகிய துறைகளுக்கான பணியிடங்களையும் இதன் மூலமே நியமிக்க
வேண்டும் என்ற அரசாணை கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சித்தா 63, ஆயுர்வேதம் 8, யுனானி 3,
ஹோமியோபதி 9 ஆகிய மருத்துவப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் மூலம் நிரப்புவதற்கு கடந்த மார்ச் 22-ஆம் தேதி அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்
மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும்.
கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் 500 ஆயுஷ்
மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பணி
வரன்முறை, ஊதிய உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை.
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் கடந்த
2009-ஆம் ஆண்டு 300 பேர், 2011-ஆம் ஆண்டு 175 பேர் என மொத்தம் 475 ஆயுஷ்
மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை பணி நிரந்தம் செய்யவில்லை என்று
கூறி அதில் பலர் பணியில் இருந்து சென்றுவிட்டனர். இப்போது 390 பேர் மட்டுமே
பணிபுரிகின்றனர். அதில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப
வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள
இந்திய மருத்துவம்- ஹோமியோபதி இயக்ககத்தின் முன் வரும் 22-ஆம் தேதி
போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்த 18 ஆயிரம் ஆயுஷ் மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








