எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ. ஆகிய படிப்புகளில் சேர அண்ணாபல்கலைக்கழகம் சார்பில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.அந்த
தேர்வு ‘டான்செட்ஸ’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு
2015–2016– ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி
ஆன்லைனிலும் விண்ணப்பித்தனர். நேரடியாகவும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து
கொடுத்தனர்.
விண்ணப்பிக்க சென்னையில் 22–ந்தேதி கடைசி நாள் என்று
இருந்தது. அந்த தேதி 29–ந்தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை
தவிர மற்ற மாவட்டங்களில் விண்ணப்பிக்க கடைசி நாள் 20–ந்தேதி என்று
இருந்தது. அந்த தேதி 25–ந்தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அண்ணாபல்கலைக்கழக டான்செட் செயலாளர் பேராசிரியர் நாகராஜன் தெரிவித்தார்.







