Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
EDNL NEWS
விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை:
விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை:
பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு
கூடுதல் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வாயிற் கூட்டம் கோவை
நிர்மலா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச்
செயலர் எம்.கனகராஜன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.செந்தூரன் தலைமை
வகித்தார்.மாநிலப் பொருளாளர் எம்.ஜம்பு சிறப்புரையாற்றினார்.
அவர்
பேசும்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பணியைக் காட்டிலும் கூடுதலாக அரசின்
நலத் திட்டங்களை நிறைவேற்றும் பணி வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்களும்,
மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, ஆசிரியர்கள் கற்பிக்கும் பணிக்கு
முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றுக்கு
ரூ.7.50 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை ரூ.20 ஆக உயர்த்திக் கொடுக்க
வேண்டும். இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநரிடம் ஏற்கெனவே மனு
அளிக்கப்பட்டுள்ளது.இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாத
நிலையில், கூடுதல் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு
8 மணி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும்
ஆசிரியர்களுக்கு பயணப் படி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றார்
அவர்.சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எல்.சிவக்குமார், நிர்வாகிகள்
எம்.மைக்கேல்ராஜ், என்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்,
ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








