Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
2014–15–ம் ஆண்டுக்கான மருத்துவ கல்வி கட்டண நிர்ணய உத்தரவுக்கு தடை இல்லை: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு:
2014–15–ம் ஆண்டுக்கான மருத்துவ கல்வி கட்டண நிர்ணய உத்தரவுக்கு தடை இல்லை: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு:
வேலம்மாள் மருத்துவக் கல்லூரிக்கு 2014–15–ஆம் ஆண்டு மருத்துவப்
படிப்புக்காக கட்டணத்தை நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
விதிக்காமல், வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டது.
எம்.பி.பி.எஸ். படிப்பு
சென்னை ஐகோர்ட்டில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அதன் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம்
தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
எங்கள் மருத்துவக்
கல்லூரி 2011–12–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் கல்லூரிக்கு
எம்.பி.பி.எஸ். படிப்புக்காக 2013–14–ம் ஆண்டுக்கான கட்டணமாக ஆண்டொன்றுக்கு
ரூ.2.30 லட்சம் என்று நிர்ணயித்து, கல்வி கட்டண நிர்ணயக் குழு
உத்தரவிட்டது.
வருவாய் பற்றாக்குறை
கட்டணத்தை நிர்ணயம் செய்யும்போது கல்லூரிக்கான செலவுகளை கருத்தில்
கொள்வதில்லை. அந்த ஆண்டில் ஊழியர்கள் சம்பளம், வங்கிக்கான வட்டி என்று
ரூ.72.71 கோடியை கல்லூரி செலவு செய்தது. ஆனால் ஆஸ்பத்திரி மூலமாக ரூ.17.67
கோடியும், மாணவர்களின் கல்விக் கட்டணத்தால் ரூ.10.26 கோடியும்தான்
வருமானமாக வந்தன. எனவே அந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.44.78
கோடியாகும்.
இந்த நிலையில் 2014–15–ம் ஆண்டுக்கான கட்டண முன்மொழிவை
சமர்ப்பிக்கும்படி கல்லூரிக்கு கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டது. எங்கள்
கல்லூரிக்கான செலவுகளைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டொன்றுக்கு
ரூ.15 லட்சத்தை கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு
கொடுத்தோம்.
மறு நிர்ணயம்
ஆனால் அதை ஏற்காமல் எங்கள் கல்லூரிக்கு 2014–15–ம் ஆண்டு
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணமாக ரூ. 2.50 லட்சத்தை அந்தக் குழு
நிர்ணயித்து உத்தரவிட்டது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு
பின்பற்றப்படவில்லை. எனவே கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவை ரத்து
செய்துவிட்டு, நாங்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில் மறுகட்டணத்தை நிர்ணயம்
செய்ய குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளக்க வேண்டும்
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி
டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல்
ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜரானார். அரசு தரப்பில் கூடுதல் பிளீடர்
பி.சஞ்சய்காந்தி ஆஜரானார்.
மனுதாரர் கோரியபடி கட்டண நிர்ணயக்
குழுவின் உத்தரவுக்கு தடை விதிக்காமல், வரும் ஜூன் 29–ந் தேதிக்கு மனு
மீதான விசாரணையை தள்ளி வைத்தனர். மேலும், எந்த அடிப்படையில் கல்லூரிகளுக்கு
கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டும் என்றும் கட்டண
நிர்ணயக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








