Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறமுடியும் பேராசிரியர் எஸ்.நாராயணராஜன் பேச்சு:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறமுடியும் பேராசிரியர் எஸ்.நாராயணராஜன் பேச்சு:
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறமுடியும் என்று பேராசிரியர் எஸ்.நாராயணராஜன் பேசினார்.
வெற்றி நிச்சயம்
‘தினத்தந்தி’ மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவன பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி
சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி
மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ்.கன்வென்ஷன் சென்டரில் நேற்று
முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சியில் பொறியியல் துறையில் உள்ள
வேலைவாய்ப்புகள் குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவன பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை ‘டீன்’ பேராசிரியர் சிரில்ராஜ்
பேசியதாவது:–
என்ஜினீயரிங் என்பது பலருடைய ஒத்துழைப்புகள் மூலம்
செய்யக்கூடிய ஒரு துறை. அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டு முயற்சியோடு
செய்தால்தான் இலக்கை அடையமுடியும். தற்போதைய காலக்கட்டத்தில் என்ஜினீயரிங்
துறை வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி எல்லாம்
எதுவும் இல்லை.
ரெயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளிலும்
என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இதேபோன்று உலகம்
முழுவதிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் என்ஜினீயரிங் படிப்பில்
ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நிறைய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே
இருக்கிறது. மேலை நாடுகளைப்போல நம் நாடும் வல்லரசு ஆகுவதற்கு என்ஜினீயரிங்
படிப்பை தேர்வு செய்து படிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ்.–ஐ.பி.எஸ்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மற்றும் அதில் உள்ள வேலைவாய்ப்புகள்
பற்றி, திருச்செந்தூர்ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்
எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) பேசியதாவது:–
இந்தியாவிலேயே
உயர்ந்த பதவிக்கு எழுதவேண்டிய தேர்வு சிவில் சர்வீசஸ் தேர்வு. மதிப்பும்,
மரியாதையும் கொடுக்கிற பதவி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட
பதவிகள்தான். இந்த தேர்வினை மத்திய அரசின் அமைச்சரகமும், யூனியன் பப்ளிக்
சர்வீஸ் கமிஷனும் (யூ.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகின்றன. தேர்வு எழுத
விரும்புபவர்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருப்பது
கட்டாயம் ஆகும்.
பொது பிரிவினர் 21 வயது முதல் 32 வயது வரையும், இதர
பிற்படுத்தப்பட்டவர்கள் 21 வயது முதல் 35 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி.
பிரிவினர் 21 வயது முதல் 37 வயது வரையும் தேர்வு எழுதலாம். எந்த
பாடப்பிரிவுகளை எடுத்து படித்தாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதலாம்.
நாம் படித்த பாடங்களையும், பொது அறிவு வினாக்களையும் கடுமையாக உழைத்து
நினைவிற்கு கொண்டுவந்து படித்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் எளிதாக
வெற்றிப்பெறமுடியும்.
இவ்வாறு எஸ்.நாராயணராஜன் பேசினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








