கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24–ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டத்தில்
ஈடுபடப்போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.இதுகுறித்து
சங்கப்பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறுகையில்,
‘வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசு
விதிமுறைகளின்படி புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். வீட்டுக்கடன் தொகையை
உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த
வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே
மாநில பிரிவு வங்கி ஊழியர்கள் சங்கம் (எஸ்.எஸ்.பி.இ.ஏ.) ஜூன் 4–ந்தேதி
குறிப்பிட்ட நகரங்களில் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து
உள்ளது.







