தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.தேர்வு
முடிவுகளை அறிந்துகொள்வதற்கான இணையதளங்கள்: www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in.அதோடு,
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல்
மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி முடிவுகளை
அறிந்துகொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு
முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இணையதளங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள்
மூலம் பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 14 முதல்
மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். மே 18 முதல் மாணவர்கள் தாங்களாகவே இந்த
மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாளின் நகல்,
மறுகூட்டலுக்கு மே 8 முதல் 14 வரை பள்ளிகளின் மூலமாக மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம். சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே 15 முதல் 20 வரை
விண்ணப்பிக்கலாம்.