உதவி என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்திட
வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார
வாரிய என்ஜினீயர்கள் சங்கம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர்கள் சங்க தலைவர் என்.கண்ணன் தலைமை
தாங்கினார். பொதுச்செயலாளர் என்.மதிமாறன், பொருளாளர் தணிகைவேல்,
துணைத்தலைவர் ஏ.ஆர்.இளவழகன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தலைவர் என்.கண்ணன் கூறியதாவது:-
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய அரசு துறைகளின் பணிவிதிகளை
போன்று உதவி என்ஜினீயர் மற்றும் இளநிலை என்ஜினீயர் முதல்நிலை இடையே 3-க்கு
ஒன்று என்ற விகிதாச்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரிய பணிவிதிகளில் உறுதி
செய்து உடனே அறிவித்திட வேண்டும்.
உதவி என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்ய
வேண்டும். என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம்
நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.