இப்பிரிவில் 61 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 ல் புவியியல் பாடத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. பலகாரணங்களால் இதுவரை நிரப்பப்படவில்லை. தற்போது காலியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ரூ.10 ஆயிரம் மாதஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கின்றனர்.
இதனால் எங்களுக்கு பணிவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம், என்றார்.








