பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 4, 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட
கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்வித்துறையால் அறிவிக்கப்பட்ட
நாட்களில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதன்படி
வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்
சிறப்பு துணை தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 2015-ம் ஆண்டு மேல்நிலைக் கல்வி தேர்வை
பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வர்களாக எழுதியிருக்க வேண்டும்.தட்கல்
முறையில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் சென்னையில் மட்டுமே
தேர்வெழுதஅனுமதிக்கப்படுவார்கள். தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ. 50
இதர கட்டணமாக ரூ.35 மற்றும் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 1000,
பதிவுக் கட்டணமாக ரூ.50ஐ, முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்வது தொடர்பான விவரங்கள்
பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.







