நினைவுகள் வாழ்வின் அடையாளங்கள் ! மலரும் நினைவுகள் வாழ்வின் பொக்கிஷங்கள்! நண்பர்களின் நினைவுகள் என்றும் நம் வாழ ஊக்குவிக்கும் உந்துசக்திகள் ! இவர்களின் மலரும் நினைவுகளை வாழ்த்தும் கல்விக்குரல்..
விழுப்புரம், மகாத்மா காந்தி உயர்நிலைப்
பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் மேனாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி
நடைபெற்றது. விழுப்புரம்,
மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1982-1983 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில்
132 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்றனர். இவர்களில் 10 பெண்கள் உட்பட 90 பேர் பங்கேற்றனர்.
இந்த
நிகழ்ச்சியில், அப்போதைய தலைமையாசிரியர் திரு. ஏ. முகமது அலிகான், திரு. பி. ராஜா பிள்ளை,
சாரண ஆசிரியர் திரு. வி. ஆர். கண்னன், திரு. ஆர். ராமகிருஷ்ணன், திரு. எம். ஜே. சுரேந்திரன்,
திரு. பி. சிவலிங்கம், கே. என். வளர்மதி, திருமதி. தனபாக்கியம், இப்போதைய பள்ளி நிர்வாகி
திருமதி க. சுசீலா, தலைமையாசிரியர் திரு. பெ. சு. ல. இரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலையில் பள்ளி வளாகத்தில்
கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மேனாள் மாணவர்களும்,
ஆசிரியர்களும் பள்ளி வளாகத்தில் உள்ள மேனாள் நிர்வாகி திரு. பெ. சு. இலட்சுமணசுவாமி
அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில்
தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அனைத்து ஆசிரியர்களுக்கும்
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். அதனைத் தொடர்ந்து மிகப் பிரமாண்டமான கேக்
வெட்டி அனைவரும் ஒருவருக்கொருவர் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். மாலையில் மாணவர்கள்
தங்களின் பசுமையான பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தங்களுடன் படித்து மறைந்த மகேஸ்வரன்,
கார்த்திகேயன், பாபுராஜ், இரவிச்சந்திரன், பள்ளி நிர்வாகி திரு. இலட்சுமணசுவாமி, ஆசிரியர்கள்
திரு. சி. ஆர். இராதாகிருஷ்ணன், திரு. துளசிங்கம், தமிழாசிரியர் திரு. அ. க. முனுசாமி,
திரு. பால்மாணிக்கம், திரு. வேலாயுதம், திரு. இராஜகோபால், ஓவிய ஆசிரியர் திரு. வி.
சோலை, உடற்கல்வி ஆசிரியர்கள் திரு ஆர். கோபாலகிருஷ்ணன், திரு. ஜோசப், ஆசிரியைகள் திருமதி.
ஆர். சுகுணாபாய், திருமதி. தெரேஸ்மேரி, செல்வி. ஷீலா, திருமதி. ஜாய்ஸி சரோஜினி, செல்வி.
சரோஜா உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவர்களில் பலர் ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும்,
மென்பொருள் பொறியாளர்களாகவும், தலைமைக் காவலராகவும், மின் வாரியத்திலும், ஒருவர் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்திலும், ஒப்பந்ததாரர்களாகவும், ஒருவர் விவசாயியாகவும், பலர் அரசு
மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு இப்பள்ளியின் மேனாள் மாணவரும்,
வி. ஆர். பி. மேல்நிலைப் பள்ளி தாளாளருமான திரு. வி. சோழன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தொழிலதிபர் திரு. பி. குமார் (சரஸ்வதி திருமண மஹால்) மற்றும் பொறியாளர் திரு. நரசிம்மன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைக்காவலர் திரு. இராஜேந்திரன், தலைமையாசிரியை
திருமதி. மு. கமலச்செல்வி, மின் வாரிய ஊழியர் தேவநாதசுவாமி உட்பட பலர் பேசினர். முன்னதாக,
ஒப்பந்ததாரர் திரு. லோ. சுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் திரு.
க. இராம்குமார் நன்றி கூறினார்.
இதற்கான முன்னேற்பாடுகளை தொழிலதிபர் திரு. கிரி
(கிரி ஜூவல்லர்ஸ்), முதுகலை ஆசிரியர் திரு. பசுபதி, திரு. முருகதாஸ், திரு. பாலாஜி,
திரு. அன்சர் பாஷா மற்றும் திரு உமாபதி ஆகியோர் செய்திருந்தனர்.







