விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து
வெற்றியை பதிவு செய்து வரும் இந்தியா, பிரதமர் மோடி ஏற்கனவே
அறிவித்திருந்தபடி 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் சார்க்
நாடுகளுக்கான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி
ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு வானிலை கண்காணிப்பு
மற்றும் தகவல் தொடர்பு சேவைகளுக்காக பரிசாக வழங்க இந்த செயற்கைக்கோளை
உருவாக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த சார்க் செயற்கைகோளை உருவாக்க 18 மாதங்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள மையத்தில் வைத்து தயாரிக்கப்பட உள்ள
இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என
தெரிவித்தார்.








