தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்:

>தனியார்களும், தொண்டு நிறுவனங்களும் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சரிக்கட்டவும், அரசின் உதவி திட்டங்களை தொடர்ந்து பெறவும், 2 லட்சம் போலி மாணவர்களை கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இ.எம்.ஐ.எஸ்., எனப்படும் கல்வி மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் மூலம் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 14 வகை இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை முறையாக சென்றடைகிறதா, பயன்பெறும் மாணவ, மாணவியர் யார் போன்ற விரிவான விவரங்கள் கல்வித்துறையால் கணக்கெடுக்கப்படுகிறன.
இந்த பணி தமிழக அரசின் இ.எம்.ஐ.எஸ்., திட்டம் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு அடிப்படையில் நடந்துள்ளது. இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள் 1.35 கோடி மாணவர்கள், 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள், http:/emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இந்த இணையதள தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியாது. ஆனால் கல்வித்துறையினருக்கு மட்டும் தனி நுழைவு ஐ.டி., வழங்கப்பட்டு தகவல்களை பதிவேற்றி வருகின்றனர்.
இந்த திட்டத்தில் 2011, 2012 மற்றும், 2013ம் கல்வி ஆண்டுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை பள்ளிகளின் பதிவேடு விவரங்களுடன் கல்வி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்ததில் பள்ளிகளில் போலியான மாணவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

கண்டறியப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் குறிப்பாக அரசு உதவிபெறும் குறிப்பிட்ட பள்ளிகளில் இரண்டு லட்சம் போலி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கணினி தகவல் மற்றும் பள்ளிகளின் பதிவேடு தகவல்களை ஒப்பிட்டதில் இரண்டு விதமான மாணவர் எண்ணிக்கை கிடைத்துள்ளது.இதனால் அனைத்து பள்ளிகளிலும் பதிவேட்டின் படி மாணவர்கள் இருந்தனரா, இருக்கின்றனரா என நேரடி ஆய்வு நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவு:அனைத்து கல்வி மாவட்டங்களிலும் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடக்கப் பள்ளிகள் குறிப்பாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று வருகைப் பதிவேடு மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை, உண்மையில் அரசின் இலவசத் திட்டங்களை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சரி கட்டப்படும் அதிகாரிகள்:

இப்பிரச்னை குறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:பல இடங்களில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது. மாணவர் எண்ணிக்கை குறைந்தால் பள்ளிக்கான அரசின் உதவிகள் பெருமளவு குறைந்துவிடும்; அரசு உதவி இணைப்பு சான்றிதழும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.
பள்ளியின் அரசு உதவிபெறும் அங்கீகார இணைப்பு, ஆசிரியர் நியமனம், அரசின் நிதித்திட்டங்கள், ஆசிரியர் மானியம் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்ள கூடுதலாக மாணவர் இருப்பது போல் போலி பெயர்களை காட்டியுள்ளனர்.
அரசு நிதியில் கணக்குக் காட்டிய ஆசிரியர்களை தங்களின் தொண்டு நிறுவனங்களின் வேறு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்வதும் நடக்கிறது.இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் 42 வித

மாணவர் விவர பட்டியலை இந்த பள்ளிகளால் வழங்க இயலவில்லை. அதனால் இ.எம்.ஐ.எஸ்., திட்ட மாணவர் எண்ணிக்கையும் வருகைப்பதிவேடு மாணவர் எண்ணிக்கையும் பெரிய அளவில் வேறுபாடாக உள்ளது.
அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது பள்ளிகளை அலங்கரித்து அவர்களை சரிக்கட்டி ஆவணம் மற்றும் மாணவர் எண்ணிக்கையை சரிபார்க்காமலேயே அனுப்பி விடுகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போலி மாணவர் சேர்ப்பு ஏன்:

* அரசு உதவிபெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்டங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
* குறிப்பிட்ட எண்ணிக்கை குறைந்தால் அரசு உதவி கிடைக்காது.
* அரசு வழங்கும் சம்பளத்தில் ஆசிரியர் நியமனம் செய்தது ரத்தாகிவிடும்.
* அரசின் நிதிஉதவி மற்றும் மாணவர் உதவித்தொகை கிடைக்காது.
* தொண்டு நிறுவன செயல்பாடுகளுக்கு பிரச்னை ஏற்படும்.

திட்டத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள்:

* மாணவர், பெற்றோர் பெயர், முகவரி, தாலுகா, மாவட்டம்.* மாணவர் சேர்க்கை, ஐ.டி., பஸ் பாஸ், உதவித்தொகை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் எண்கள்* பிறந்த தேதி, பள்ளியில் சேர்ந்த தேதி, ஏற்கனவே படித்த பள்ளி, தற்போது படிக்கும் பள்ளி, வங்கி கணக்கு எண்.* ரத்தப்பிரிவு, உடன் பிறந்தோர் எண்ணிக்கை, அங்க அடையாளம், மதம், இனம், நாடு போன்ற 42 வகை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

8,250 பள்ளிகள்:

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பிரிவுகளில் 8,250 பள்ளிகள், அரசு நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன; இந்த பள்ளிகளில், ஆவண கணக்கின் படி 33 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; 95 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H