பிகாரில் நடத்தப்படும் சூப்பர் 30
இலவச ஐஐடி-ஜெஇஇ பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்ட பிரிவை
சேர்ந்த 30 மாணவர்களில் 25 பேர் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள், விவசாயி, டிரைவர் ஆகியோரின் பிள்ளைகள் ஆவார்.
சூப்பர் 30 பயிற்சியில் சேர்ந்து படிக்க ஒவ்வொரு
ஆண்டும் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. ஆனால், மாணவர்களின்
திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச பயிற்சி
வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இந்தாண்டு 25 மாணவர்கள் தேர்வு
செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கு முக்கிய காரணம்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பே என்று சூப்பர் 30 பயிற்சி
மையத்தின் நிறுவனர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.