பல்லாண்டுகளாக எல்.ஐ.சி.யில்
காலியாக உள்ள 3,4-ம் பிரிவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று
அகில இந்திய எஸ்.சி.,எஸ்.டி. எல்.ஐ.சி. ஊழியர் நலச்சங்கம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின்
15-வது தென் மண்டல மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிóன் அடிப்படையில் முதல்நிலைப்
பதவிகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 2012ம் ஆண்டு முதல் வழங்க
வேண்டிய ஊதிய உயர்வை எவ்வித நிபந்தனைகளிலுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.
2009-ம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள வளர்ச்சி
அதிகாரிகளுக்கான விதிமுறைகளை மாற்ற வேண்டும், மாநில அளவில் நடைபெறும்
ஆளெடுப்பின் போது பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு விகிதாசாரத்தையே பதவி
உயர்வுக்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு மண்டலத் தலைவர் ஏ.மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயலர்கள் ஜி.கிருஷ்ணமூர்த்தி வேணுகோபால் முன்னிலை வகித்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா மாநாட்டைத்
தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் அகில இந்தியச் செயலர்கள்
ஆர். நாகராஜன், ஆர். வீரமணி ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.
மாலையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின்
பொதுச் செயலர் இ.அன்புசெல்வம் வேலை அறிக்கையையும், பொருளாளர்
ஆர்.ஜனார்த்தனன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்துபேசினர்.
மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் தமிழகம், கேரளம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, மண்டல சிறப்பு அமைப்புச் செயலர் பி.எஸ்.சுவாமியப்பன்
வரவேற்றார். செயலர் ஆர்.மணி நன்றி கூறினார்.








