அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர், மற்றும் இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பு
மற்றும் ஒன்றியத் தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்
மற்றும் இரவுக் காவலர் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில்
நிரப்பப்பட உள்ளன. அரியலூர் அலுவலக உதவியாளர் பணியிடம் -1
ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்) செந்துறை ஊராட்சி
ஒன்றியம், அலுவலக உதவியாளர் பணியிடம் - 1 (மிகவும்
பிற்படுத்தப்பட்டவர், ஆதரவற்ற விதவை)
முன்னுரிமையுள்ளவர்.ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், இரவுக்
காவலர் பணியிடம் - 1 (பொது முன்னுரிமையற்றவர்)
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும், 1.7.2014-ல் 18 வயது பூர்த்தி
அடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க
வேண்டும்.இரவுக் காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும், விண்ணப்பதாரர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும், கல்வித் தகுதி சான்று, ஜாதிச் சான்று, நன்னடத்தை
சான்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பதற்கான சான்று
நகல்களுடன், மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி)அலுவலகம், அரியலூர்
என்ற முகவரிக்கு வியாழக்கிழமை (ஜூன் 25) மாலைக்குள் கிடைக்குமாறு
விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.








