தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள்
சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய நியமிக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுக்கள்
சனிக்கிழமை முதல் ஆய்வு மேற்கொள்கின்றன.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை
மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கவும், சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை
பள்ளிகள் வெளியிடவும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாய்ப்பு மறுக்கப்படும் பெற்றோருக்கு அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்.
அத்துடன் தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், பள்ளிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேலூர்
மாவட்டத்துக்கு 37 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர்
சனிக்கிழமை முதல் தங்கள் ஆய்வை தொடங்கவுள்ளனர்.