குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் (எம்.எஸ்.எம்.இ.,), வேலை
தேடுவோர் பயன் பெறும் வகையில், மத்திய புதிய இணையதளத்தை அரசு, நேற்று
துவக்கியுள்ளது. டில்லியில், நேற்று நடந்த இணையதள துவக்க நிகழ்ச்சியில்,
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா
கலந்து கொண்டு பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களான, 'டிஜிட்டல் இந்தியா, திறமையான இந்தியா, இந்தியாவில் தயாரியுங்கள்' ஆகியவற்றின் ஒரு அங்கமாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை தேடுவோர் பயன் பெறும் வகையில், எமது அமைச்சகம், இணையதளத்தை உருவாக்கி உள்ளது. -
www.eex.dcmsme.gov.in என்ற, இந்த இணையதளம் மூலமாக வேலை தேடுவோரும், தொழிலாளர்கள் தேவைப்படும் நிறுவனங்களும், பரஸ்பரம் பயன் பெறலாம். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களான, 'டிஜிட்டல் இந்தியா, திறமையான இந்தியா, இந்தியாவில் தயாரியுங்கள்' ஆகியவற்றின் ஒரு அங்கமாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை தேடுவோர் பயன் பெறும் வகையில், எமது அமைச்சகம், இணையதளத்தை உருவாக்கி உள்ளது. -
இந்த இணையதளத்தில் ஏற்கனவே இருவர் தம் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்த இணையதளத்தால், ஊழியர்களை தேடுவதற்கான செலவு மற்றும் கால விரயம், தொழில் நிறுவனங்களுக்கு வெகுவாகக் குறையும். இவ்வாறு கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.







