பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழ் செயல்படும்
கல்லூரி -பள்ளிகளுக்கான விடுதிக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து
வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி கட்டடத்தையும், அரியலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருச்சி, திருவாரூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர், தருமபுரி, நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 38 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவ-மாணவியர் விடுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 12- ஆம் தேதி திறந்து வைத்தார்.
சிவகங்கை, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கொடைக்கானல், நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, திருச்சி மாவட்டம்
நாவலூர் குட்டப்பட்டு மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 6
பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிகள், சேலம், கடலூர், தருமபுரி,
நாமக்கல், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 24 மிகப்
பிற்படுத்தப்பட்டோர் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியர் விடுதிகளையும் அவர்
திறந்தார்.இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி கட்டடத்தையும், அரியலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருச்சி, திருவாரூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர், தருமபுரி, நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 38 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவ-மாணவியர் விடுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 12- ஆம் தேதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சப்பட்டி, தேனி மாவட்டம் எ.வாடிப்பட்டியில் சீர்மரபினர் மாணவர் விடுதிகள், புதுக்கோட்டை (நாகுடி, கொத்தமங்கலம்), திண்டுக்கல் (பேகம்பூர்), தேனி (மேலகூடலூர்) ஆகிய இடங்களில் சீர்மரபினர், கள்ளர் மாணவ-மாணவியர் விடுதிகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், மதுரை மாவட்டம் செக்கானூரணியில் கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் என மொத்தம் ரூ.62 கோடி மதிப்பிலான விடுதிகள், பள்ளிக் கட்டடங்களை அவர் திறந்தார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள் பி.தங்கமணி, அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.