எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற 17 மாணவர்களில் 4 மாணவர்கள் நாமக்கல் மாவட்டம், போதுப்பட்டி கிரீன்பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்; இதே மாவட்டத்திலுள்ள எஸ்கேவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி (எம்.கண்டம்பாளையம்), மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி (பரமத்தி), வித்யா விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி (திருச்செங்கோடு), எஸ்.எஸ்.எம்.லக்ஷ்மியம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி (குமாரபாளையம்) ஆகியவற்றைச் சேர்ந்த 4 மாணவர்களும் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாணவர் சிறப்பிடம்: எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களில், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் நிஷாந்த்ராஜன் முதல் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் 17 மாணவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 17 மாணவர்கள் பெற்றுள்ளதால், பிறந்த தேதி, சம வாய்ப்பு எண் ஆகியவற்றின் அடிப்படையில் நிஷாத்ராஜனுக்கு முதல் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.








