பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில்
சேர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு
மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில், 10ம் வகுப்பில்
தேர்ச்சி பெற்ற, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க
மறுத்துவிட்டனர்.
அரசு உத்தரவை காரணம் காட்டி, பள்ளி தலைமை ஆசிரியர், பார்வையற்ற மாணவியரை
திருப்பி அனுப்பினார். இதனால், அதிருப்தியடைந்த மாணவியரின் பெற்றோர்
மற்றும் மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகிகள், முதல்வர் மற்றும்
மாற்றுத்திறனாளி நலத்துறையிடம் முறையிட்டனர்.இதையடுத்து, அதே பள்ளியில்,
பார்வையற்ற ஏழு மாணவியரையும், பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசு
உத்தரவிட்டுள்ளது