சரித்திரம் படைத்த சரித்திர நாயகனின் வரலாறு !! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


சரித்திரம் படைத்த சரித்திர நாயகனின் வரலாறு !!

கலைஞர் 95

1. பிறப்பு : 1924 ஜுன் 3ஆம் தேதி

2. தந்தை : முத்துவேல்

3. தாயார் : அஞ்சுகம்

4. சகோதரிகள் : சண்முகசுந்தரம், பெரியநாயகி

5. இடம் : திருக்குவளை கிராமம், திருவாரூரில்இருந்து 15 மைல் தொலைவில்

6. தந்தையின்முதல்மனைவி : குஞ்சம்மாள்

7. இரண்டாம்மனைவி : வேதம்மாள்



8. மூன்றாவதுமனைவி : அஞ்சுகம்

9. கலைஞரின் முதல்மனைவி :பத்மா (திருமணம் 1944 செப்டம்பர் 13. காலமானது 1948). இவர் இசைச் சக்ரவர்த்தி சி. எஸ். ஜெயராமனின் சகோதரி.

10. இரண்டாம் மனைவி : தயாளுஅம்மாள் (1948 செப்டம்பர் 15)

11. மூன்றாம் மனைவி : ராஜாத்திஅம்மாள் (திருமணம் 1966)

12. பிள்ளைகள் :மு.க. முத்து, முதல்மனைவிக்குப் பிறந்தவர்.

13. ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு(தயாளு அம்மாவுக்குப் பிறந்தவர்கள்)

14. கனிமொழி (ராஜாத்தி அம்மாள்)

15.  அவருடைய பெற்றோர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார்.

16. கலைஞரின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவம், ஏழ்மையில் இருந்த போதிலும், அவர் தமிழ் மீதும் தமிழ்  இலக்கியத்தின் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்தார்.

17. நீதிக்கட்சியின் தூண்களுள் ஒருவரான பனகல் அரசர் பற்றிய நூல், கலைஞரின் பாடமாக இருந்தது.அந்தப் பள்ளியிலேயே கலைஞர் மட்டுமே அந்த 50 பக்க நூலையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.கலைஞரின் அரசியல் ஆர்வத்திற்கான விதையை இந்நூலே தூவியது எனச் சொல்லலாம்.

18. அந்தக் காலக்கட்டத்தில் தான்  தந்தை பெரியார் சுயமரியாத இயக்கத்தைத் துவக்குகிறார். அவரது தளபதியாக உருவெடுக்கிறார், பேரறிஞர் அண்ணா. இச்சமயத்தில் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரியார், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிட, முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் உருவானது. பெரியார் தொண்டர்கள் மாநிலம் முழுதும் கிளர்ச்சி செய்தனர்.

19. ஜூன் 3, 1938. சைதையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் அழகிரிசாமியின் புயலை ஒத்த பேச்சும், மறைமலை அடிகளாரின் செந்தமிழ் உரையும், பேரறிஞர் அண்ணாவின் அறிவு பூர்வமான அழகு தமிழ் உரையும் இந்தி எதிர்ப்புத்தீயை பரவிடச் செய்தன. மாணவன் கலைஞரின் மனதிலே இவையே மாபெரும் மாற்றத்தைச் செய்திட்டன.

20. அப்போதே குல்லுகப்பட்டர் இராசாசி, தமிழ்த்தாயைக் கத்தியால் குத்துவது போல படம் வரைந்து, ஒரு சைக்கிள் ரிக்ஷா ஊர்வலம் நடத்தினார். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்ற முழக்கத்துடன் அந்தச் சாலை வழியே வந்த தனது இந்தி ஆசிரியருக்கும் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து இந்தி ஒழிக என்று கத்தியது அந்த இளஞ் சூரியன்.

21. பள்ளியில் படிக்கும் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கினார். ஆனால் பேசுவதற்கு முன் குறிப்பெடுப்பது, பேசிப்பேசிப் பழகுவது எனத் தன்னைத்தயார் படுத்திக் கொண்டே போட்டிகளில் ஈடுபடலானார். அந்தப் பழக்கத்தை அவர் கைவிடவே இல்லை.

22. தனது 15வது வயதில் மாணவ நேசன் எனற பெயரில் ஒரு கையெழுத்துப் பிரதியை உருவாக்கி அதனை ஐம்பது பிரதிகள் எடுத்து, நண்பர்களின் தனிச்சுற்றிற்கு அனுப்பி வைத்தார்.

23. இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது.

24. கலைஞரின் தந்தை முத்துவேலர் கவியாற்றல் கொண்டவர். வடமொழி கிரந்தங்களில் தேர்ச்சி உடையவர். இயல்பிலே கவியாற்றல்,எழுத்தாற்றல் கொண்டிருந்த கலைஞருக்கு சமயத்தின் பால் சிந்தனை செல்லவில்லை.

25. பள்ளிக் காலத்திலேயே தந்தை பெரியாரின் குடியரசு இதழை வாங்கிப்படித்ததால் நாத்திகரானார்.

26. ஒரு முறை ஒரு மதப்பிரசங்கி சைவ உணவு பற்றித் திருவாரூரில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த கலைஞர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார். சைவர், மரக்கறி உணவின் பெருமையைக் கூறி அசைவ உணவைச் சாடினார்.  ஒரு கோழியைத்தின்று விட்டால், அவ்வளவுதான் கோழி மறைந்து விடும். மீன் ஆடு..எல்லாம் அப்படித்தான். அழிந்து விடும். ஆனால், கத்திரிக்காய் சாப்பிட்டால், செடி அப்படியே இருக்கும், தேங்காய் சாப்பிட்டால், தென்னை மரம் அப்படியே இருக்கும்…என்று கூற..சிறுவன் கலைஞர் எழுந்தார்: அய்யா, கொத்தமல்லியைச் சாப்பிட்டால், மல்லிச் செடி இறந்து விடுமே, அது அசைவ உணவா? என்று கேட்க வாயடைத்துப் போனாராம்…

27. பள்ளியிறுதித்தேர்வில் மூன்று முறை ஃபெயில் ஆனார். நான்காவது முறை எழுத அனுமதி இன்மையால் படிப்பை நிறுத்தியது அந்த சுயம்புச் சூரியன்.

28. 1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசூலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்.

29. 19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென  "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார். 1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.

30. 1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடநாடு இதழுக்கு எழுதும்   இளைஞரைக் கூட்டிவாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒரு சிறுவனை அண்ணாவின் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அந்த எழுத்துக்கு உரியவன் இந்தச் சின்னப்பையனா? என அண்ணா ஆச்சரியப்பட்டுப்போனார். படித்து முடித்து விட்டுவா உன்னை சுயமரியாதை இயக்கத்தில் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி கலைஞரை அனுப்பி வைத்தாராம் அண்ணா. ஆனால் அண்ணாவின் இந்த அறிவுரையைக் கலைஞர் கேட்கவில்லை. இது பற்றிப் பல முறை வருந்தியிருக்கிறார், கலைஞர்.

31. 1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்பாடல் பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார்.

32. இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார்.  அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.

33. 28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் கலைஞரின் முரசொலி ஏடு கண்டு மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு  பேசத்தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார்.

34. 11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

35. புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பெரியாரைச் சந்தித்தார். பெரியார் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.

36. 19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிரி அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார்.

37. 19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின்  மரணச் செய்தியோடு வந்தார்.

38. 1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக்  கலைஞர் வடித்தார்.

39. 1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள்  கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்.

40. 1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் கலைஞர்.

41. 17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர்.

42. தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962

43. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967

44. பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969

45. தமிழக முதலமைச்சர் 1969 – 1971

46. இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976

47. தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983

48. தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986

49. மூன்றாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991

50. நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001

51. ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006-2011

52. கலைஞருக்கு,  கலைஞர் என்கிற அந்தப் பட்டப் பெயரை அளித்தவர் நடிகவேள் ராதா. தூக்கு மேடை நாடகத்தை எழுதியதற்காகப் புளகாங்கிதம் அடைந்து, ராதா இப்பட்டத்தை வழங்கினார்.

53. கலைஞர்தான் என் திரைக்கதை குரு என அண்மையில் மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸில் சீனிவாசன் பணியாற்றிய போது, அங்கே மந்திரிகுமாரி படத்தை எழுதிய கலைஞரிடம் இருந்து திரைக்கதை நுணுக்கங்களைத்தான் அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் நுழைகிற போது அருகில் இருந்த மருத்துவரிடம்..."ஒரு பேட்ஸ்மேன் 90 ரன் அடிச்சுட்டா அவன் செஞ்சுரி அடிச்சே தீரணும்...ஆனா அதுக்கு பிட்சும் ஒத்துழைக்கணும் இல்லையா" என்றாராம், சிரித்துக் கொண்டே..

54. ஒரு முறை கவிஞர் வாலியின் உணவுமுறை பற்றிப் பேச்சு வந்தது. அவர் சைவமா அசைவமா என. அவர் அய்யங்கார் என்றாராம் அருகில் இருந்தவர்.  கலைஞர் சிரித்துக்கொண்டே..."வாலி..சுறாமீன் சாப்பிடும் பிராமின்..".என்றாராம்...

55. தலைமைச் செயலகத்தில் ஒரு முறை புது லிஃப்ட் அமைக்கப்பட்டிருந்தது. கலைஞர் உள்ளே நுழைய கலைஞரோடு வந்தவர்களில் நான்கு பேர் மட்டுமே செல்லலாம் என்றாராம்  ஆப்ரேட்டர். ஏன்யா என்றாராம் கலைஞர். சார் இதுல அஞ்சு பேர்தான் சார் போலாம் என்றாராம். உடனே கலைஞர் இதென்னய்யா பாஞ்சாலி மாதிரி..என்று  சிரித்துகொண்டே கூறினாராம்.

56. கலைஞர் இசை வேளாளர் பிரிவில் பிறந்ததால், அவருக்கு இசையில் நாட்டம் அதிகம். ஒரு திருமண விழாவில் அண்ணா பேசிய போது, கருணாநிதிக்கு நாயனம் வாசிக்கத்தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாயனம் வாசிக்கக் கற்றுக் கொண்டு பாதியிலே விட்டிருக்கிறார்.

57. தமிழ் நாட்டில் தேவதாஸி முறை முற்றிலும் ஒழிந்ததற்குக் கலைஞர் பெருங்காரணமாவார்.

58. கலைஞர் எங்கும் தனது சாதியைக் குறிப்பிட மாட்டார். ஜெயகாந்தன் ஒரு முறை கலைஞரை பேட்டி எடுக்கையில் உங்கள் அப்பா பேர் என்ன எனக் கேட்க முத்துவேலர் என்றாராம் கலைஞர். முத்துவேல் பிள்ளை என்று சொல்லுங்கள் என ஜே கே சொல்ல, இல்லை வெறும் முத்துவேலர் தான் என்றிருக்கிறார்.

59. கலைஞரின் உயிர்நண்பர்கள் என்றால் அது பெரும்பாலும் சினிமாக்காரர்களே. எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன், வாலி என. எம்ஜிஆரின் தாய் சத்யா அம்மையார், கலைஞரைச் சொந்தப் பிள்ளை போல நடத்தினாராம். அதே போல் அன்னை அஞ்சுகம் அம்மையாரும் எம்ஜிஆரைச் சொந்தப் பிள்ளை போல் நடத்தியிருக்கிறார்.

60. கலைஞர் வாழ்விலேயே செய்த மிகப்பெரும் தவறு, எம்ஜிஆரைக் கட்சியை விட்டு நீக்கியதே. திமுகவில் ஒரு கும்பல் கலைஞர் எம்ஜிஆர் நட்பு பிடிக்காமல் இவர்களை எப்படியாவது பிரித்திடலாம் எனச் சூழ்ச்சி செய்து, இருவரிடமும் கோள் மூட்டிப் பிரிவினையை வளர்த்த போது…மு.க. முத்து ஹீரோ ஆன விஷயம் எம்ஜிஆரிடம் தவறாகக் கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும் முத்துவின் முதல் படமான பிள்ளையோ பிள்ளையின் துவக்க விழா எம்ஜிஆர் தலைமையில் தான் நடந்தது. படத்தில் எம்ஜிஆரின் போஸ்டர்களும் காட்டப் படும். இப்படத்தில் மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ என்ற பாடலை வாலி எழுதினார். அப்பாடலைக் கேட்டு எம்ஜிஆர் கோபம் அடைந்து வாலியை அழைத்து..ஏய்யா என் பாட்டை எல்லாம் அவனுக்கு எழுதியிருக்கே என்று கடிந்து கொண்டாராம். இந்தச் சூழலில், எம்ஜிஆர், கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேரப் போகிறார் என்கிற தகவல் வரவே, கலைஞர் அவரை சஸ்பெண்ட் செய்ய எண்ணினார். அப்போது எம்ஜிஆரை நீக்காதீர்கள் என அழுது புலம்பியது முரசொலி மாறன் அவர்கள். நீக்கச் சொன்னது நாவலர் உள்பட அனைத்துத் தலைவர்களும். கடைசியாக மாறன் பேச்சைக் கேட்டு, நீக்கும் முடிவை கலைஞர் கைவிட, அதற்குள், நெடுஞ்செழியன் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லி விட்டார்…திமுக வின் சரிவு துவங்கியது.

61. எம்.ஜி.ஆரும் கலைஞரும் அரசியலில் கீரியும் பாம்பும் போல இருந்தாலும் சட்டசபையிலோ அல்லது வெளியிலோ, ஜெயலலிதாவைப் போல கருணாநிதி என்று சொன்னதில்லை. கலைஞர் என்றே குறிப்பிடுவார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை சட்டசபையில் உரையாற்றிய ஒரு அ.தி.மு.க உறுப்பினர், கருணாநிதி, என்று பெயர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவரை அழைத்த எம்.ஜி.ஆர், நானே அவரை பெயர் சொல்லி அழைப்பதில்லை. இனிமேல் அவரை கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும் என்று கடிந்து கொண்டாராம்.. அதனால் தான் எம்.ஜி.ஆர். மரணமடைந்த தகவல் கிடைத்ததுமே அதிகாலைப் பொழுதிலேயே ராமாவரம் சென்று படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார்.

62. இந்திராவால் 356 பிரிவின் கீழ், 170 எம் எல் ஏ வைத்திருந்த  கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு, 13 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞரை, இந்திராவின் பிள்ளை ராஜீவின் தூண்டுதலால், சந்திர சேகர் அதே 356 பிரிவின் கீழ் கலைத்தார். இந்தியாவிலேயே இரண்டு முறை கலைஞர் ஆட்சிதான் கலைக்கப் பட்ட்து.

63. திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது திண்டு எங்களுக்கு, கல் எம்ஜிஆருக்கு என்று பேசினார். எம்ஜிஆர் அதைக் காப்பி அடித்து, திண்டு எங்களுக்கு, கல் கருணாநிதிக்கு என்றார். அதற்கு அழகாய் பதில் அளித்தார்: ஆம்..தோல்வியால் துவண்டு தூங்க திண்டு உங்களுக்கு, வெற்றியைப் பொறித்திட கல் எங்களுக்கு. (ஆனால் தேர்தலில் தோற்றார் என்பது வேறு விஷயம்)

64. 1980ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது: சோதனையின் கொம்புடைத்து சாதனையாக்கிடும் காலம் கனிந்தது என்றார். 38 தொகுதிகளில் கழகம் வென்றது.

65. ஒரு முறை சத்துணவின் கூட இரண்டு முட்டைகள் வழங்க உத்தரவிட்டார், அப்போது அருகிலிருந்த துரைமுருகன், தலைவரே ரெண்டு முட்டைய வெச்சி ஆம்லெட் போடச்சொல்லலாமே, என்றதற்கு,வேணாய்யா. பாயில்டு முட்டன்னா ரெண்டா ஒன்னான்னு சந்தேகம் வராது.ஆனா ஆம்லெட்னா, ஒரு முட்டைல ஊத்திட்டு ரெண்டுன்னு சொல்லி ஏமாத்த முடியும்  இல்ல..அதனால வேக வெச்ச முட்டையே தருவோம் என்றார்.

66. தான் ஆட்சியில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தலைமைச் செயலகம் சென்று பணியாற்றுவார். தலைமைச் செயலக அதிகாரிகள் முணுமுணுத்துக்கொண்டு பணியாற்றுவர். ஏனென்றால், முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது எப்போது என்ன கேட்பாரோ என அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுவார்கள்.

67. 1999-ம் ஆண்டு ஓர் அதிகாலைப் பொழுதில், புழல் ஏரி உடையும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக அன்றைய முதல்வர் கலைஞருக்குத் தகவல் தரப்படுகிறது. உடனே உயர் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு வரச்சொல்லிவிட்டு தானும் புறப்பட்டுப் போகிறார். அதற்கு முன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளையும் துணை ராணுவப் படையினரையும் செல்லச் சொல்லி உத்தரவிட்டார். அதுபற்றி எழுதிய ஆங்கில நாளேடு ஒன்று, ''அதிகாலையில் கருணாநிதி தலைமைச் செயலகம் சென்றபோது லிஃப்ட் ஆபரேட்டரும் இல்லை. லிப்ஃட்டும் தரைத்தளத்தில் இல்லை. உடனே முதல்வர் படிகள் வழியே தன் அறைக்குச்  சென்றார். அவசரத்தில் முதல்வரின் கால்கள் இரண்டு இரண்டு படிகளைத் தாண்டி தாண்டிச் சென்றன'' என்று குறிப்பிட்டது.

68. கலைஞருடைய ஞாபக சக்தி உலகப் பிரசித்தம். ஆனால் அதை தனது குறைபாடாகத்தான் கருதினார் கலைஞர். பலரும் செய்த துரோகங்கள் நினைவில் இருந்தால் உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே மறதி ஒரு மாமருந்து என்றார்.

69. நீண்ட ஆயுள் பற்றிப் பேசுகையில் அதுவும் ஒரு சாபம் என்றார். கூட இருந்தவங்க ஒவ்வொருத்தராப் போய்கிட்டே இருந்தா, நமக்கு அதை விடச் சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

70. தமிழின் பல சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை கலைஞரைச் சாரும். கழகம், வாரியம், ஒன்றியம், போக்குவரத்து, கால்நடை போல…

71. சட்டசபையில் கலைஞரின் நகைச்சுவை பற்றி ஒரு தனி நூலே எழுதலாம். குறிப்புகள் இல்லாமல் எங்கும் பேசவே மாட்டார். அதே போல், சட்ட மன்றத்தில் யார் என்ன பேசினாலும் அதை அவர் மறக்கவே மாட்டார். அதிமுக எம் எல் ஏ ஜி.விசுவநாதன்(வி ஐ டி) ஒரு முறை எம்ஜிஆர் முன்னிலையில் உங்களுக்கு எல்லாம் நல்ல படியாக அமைந்து விட்டது, ஆனால் நல்ல எதிர்க் கட்சித்தலைவர் தான் அமையவில்லை..எனக் கலைஞரைக் கிண்டலடித்துக் கூறியிருக்கிறார். கலைஞர் அவரை முறைக்க, எம்ஜிஆர் அதை ரசித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிவி குடும்பத்தோடு கலைஞர் இல்லம் போக, அவரது பிள்ளைகளிடம் உங்கப்பா அசெம்பிளில என்னப் பத்தி என்ன சொன்னாரு தெரியுமா என்று ஜிவி கூறியதை அப்படியே கூறியுள்ளார்.

72. சினிமா நிகழ்ச்சிகளில் கலைஞர் விரும்பிக் கலந்து கொள்வார். ஆனால் படத்தைப் பார்த்து விட்டுத்தான் பேசுவார். ”படையப்பா வசூல் ரெகார்டையெல்லாம் உடையப்பா” விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் யெஸ்டர் டே” “ டி.ஆர். என்னில் பாதி”..என்பது போலப் பல பட விழாக்களில் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

73. மாறன் சகோதரர்களுக்கும் கலைஞருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கின்போது (2008), 'உளியின் ஓசை' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் இது: 'பறக்கத் தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது.'

74. முரசொலிக்கு வரும் கட்டுரைகள் கலைஞரின் ஒப்புதல் பெற்றே  பிரசுரமாகும். ஒருமுறை தன் இருக்கையின் நுனியில் உட்கார்ந்துகொண்டு கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் கலைஞர். அப்போது மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் கலைஞரிடம், ''சேரில் சாய்ந்துகொண்டு பாருங்களேன்'' என்றார். அதற்கு கருணாநிதி  சொன்னார், ''வேணாங்க சாஞ்சிக்கிட்டா சோம்பேறித்தனம் வந்துடும்''. - இப்படிச் சொன்னபோது அவருக்கு வயது எண்பத்து இரண்டு.

75. இந்திப்படங்களை விரும்பிப் பார்ப்பாராம். மாடர்ன் தியேட்டர்சில் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரம், ஒரே நாற்காலி போட்டு உட்காரும் பழக்கம் உள்ளவர். அவர் இரண்டே பேருக்கு மட்டுமே தன் எதிரில் அமர அனுமதி வழங்குவாராம். அதில் ஒருவர் கலைஞர். மற்றவர், கண்ணதாசன்.

76. கலைப்புலி தாணு  தி முக விற்காக ஒரு பிரச்சாரப் படம் செய்ய விரும்பிய போது  ஒப்புக்கொண்டு தனது பழைய ஃபுட்டெஜெல்லாம் கொடுத்து உதவினார்.  தாணு அவர்கள் இசையமைத்து அவரே பாடல்களும் எழுதினார். கலைஞர் அடிக்கடி எடிட்டிங்கிற்கு வந்து மாற்றங்கள் சொல்வதுண்டு. அப்போது ஓர் இடத்தில் பிச்சைக்கார மறுவாழ்வைப் பற்றிச் சொல்கையில் அய்யா சாமி தர்மம்  பண்ணு. அம்மா தாயே தர்மம் பண்ணு..இட ஒழிச்சவர் நம்ம கலைஞரு..என்று வந்தது. அந்த இடத்தில் நிறுத்தச் சொன்ன கலைஞர், தாணு..அத அய்யா சாமி பிச்ச போடு.. அம்மா தாயே பிச்ச போடுனு மாத்திடு..இல்லன்னா..கருணாநிதி.தர்மம் பண்றத ஒழிச்சாருன்ற மாதிரி ஆயிடும்.. என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

77. ஒரு முறை கலைஞரோடு திமுக பிரச்சாரப் படம் எடுப்பது குறித்து ஒரு சந்திப்பு. அப்போது பேசிக்கொண்டிருக்கையில் நான் சொன்னேன் அய்யா நீங்க ஒரு முறை என்னை எல்லோரும் முதல் அமைச்சர் என்கிறார்கள். ஆனால் அண்ணா என்கிற முதலை இழந்த அமைச்சர் நான்  சொன்னீங்க என்றேன்..சொன்னேனாயா என்றார்..ஆமாய்யா சொன்னீங்க என்றேன்..அவர் ஆச்சர்யத்தோடு தாணு சாரைப் பார்த்து, சின்ன புள்ள எவ்ளோ ஞாபகம் வெச்சிக்கிட்டிருக்கு என்றார். மு.க ஸ்டாலின் அவர்களும், சண்முகநாதன் அவர்களும் கூட இருந்தனர்.

78. நெருக்கடியான தருணங்களில் துணிச்சலுடன் முடிவெடுப்பார். கொள்கை அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வார்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி:  தந்தை பெரியார் தனது  94 வது  வயதில் காலமானார் என்ற செய்தி ‘கலைஞருக்குதெரிவிக்கப்பட்டது. தனது ஆட்சியில் அப்பெயரியவருக்கு பிரமாண்டமான இறுதி மரியாதையைச் செய்து விட வேண்டும் என எண்ணினார் கலைஞர். தலைமைச் செயலாளரை அழைத்து சென்னையில் மறுநாள் பூரண அரச மரியாதைகளும் பெரியாரின் பூதவுடல் பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொன்னார்.  தலைமைச்செயலாளர், பெரியாருக்குப் பூரண அரச மரியாதை அளிப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர் ஒரு மக்கள் தலைவராக இருந்தாலும் அரசு பதவிகள் எதையும் வகிக்காதவர், அரசு பதவி வகிக்காதவருக்கு அரசு மரியாதை தரும் வழக்கம் கிடையாது. அப்படிச்   செய்தால் மத்திய அரசுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்றார். அதெல்லாம் எனக்குத் தெரியாது.... பூரண அரச மரியாதைகளுடன் பெரியாரின் நல்லடக்கம் நடைபெறவேண்டும் என்று கலைஞர்சொன்னதும், எப்படி விதிகளை மீறுவது? என்று இழுத்தார் தலைமைச்செயலர். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அரச பதவியாவது வகித்திருக்கிறாரா? அவருக்கு மத்திய அரசாங்கம் பூரண அரச மரியாதைகளுடன்தானே இறுதிக்கிரியைகளைச் செய்தது? காந்திக்கு ஒருநீதி பெரியாருக்கு ஒருநீதியா? பெரியாருக்கு பூரண அரச மரியாதைகளுடன் இறுதி மரியாதை நடக்கவேண்டும். இதனால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று சொல்லி அவரை அனுப்பினார் கலைஞர். பூரண அரச  மரியாதைகளுடன் நடைபெற்றன பெரியாரின் நல்லடக்கம்.

79. இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது அவருடன் கூட்டணி வைத்திருந்த கலைஞர் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் நெருக்கடிநிலையை எதிர்த்தார். நெருக்கடி நிலைகாலத்தில் இயற்றப்பட்ட மிசாசட்டத்தின் கீழ்பல தி.மு.க தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

80.  அவ்வாறு சிறைசென்றவர்களில் ஒருவர் ஸ்டாலின். சிறையில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். தி.மு.க தலைவர்களுள் ஒருவரான சிட்டிபாபு சிறைக் கொடுமைகளுக்கு  ஆளாகி உயிரிழந்தார்.

81. 1983 ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனக்கோரி தன் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

82. இந்திய அமைதிப் படை இந்தியா வந்த போது இந்திய வீரர்களை வரவேற்பதற்கு கலைஞர் அங்கே செல்லவில்லை. பின்னர் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, என் சகோதரர்களான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தவர்களை நான் வரவேற்கமாட்டேன்  என்று துணிச்சலாக சொன்னார்.

83. வேலூரில் கண்டி மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கல்லறை அமைந்திருக்கும் இடம் மிகமிக அசுத்தமாக்க் கேட்பாரற்றுக் கிடந்தபோது, , முத்துமண்டபம் என்ற பெயரில் கட்டிடமொன்றை எழுப்பி கண்டி மன்னர் மற்றும் குடும்பத்தினரின் கல்லறைகளைப் பாதுகாத்தார்.

84. தமிழகத்தில் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டபோது கொலையாளிகள் தப்பிச் செல்வதற்கு கலைஞர் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனால் ஆட்சியை இழந்தார்.

85. பின்னர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்ட போது, திமுக பெருத்த அடி வாங்கியது. 1991 தேர்தலில் கலைஞர் மட்டுமே வென்றார்.

86. கலைஞர் இந்திய வரலாற்றிலேயே தேர்தலில் தோல்வியுறாத ஒரே தலைவர் ஆவார்.

கலைஞரின் சட்ட மன்ற சாதனைகள்:
1957  குளித்தலை
1962  தஞ்சாவூர்
1967  சைதாப்பேட்டை
1971  சைதாப்பேட்டை
1977  அண்ணா நகர்
1980  அண்ணா நகர்
1989  துறைமுகம்
1991  துறைமுகம்
1996  சேப்பாக்கம்
2001  சேப்பாக்கம்
 2006  சேப்பாக்கம்
 2011  திருவாரூர்
2016 திருவாரூர்

87. விருதுகள்:
அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.

88. தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.

89. தமிழ்நாட்டு ஆளுநரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.

90. தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.

91. கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

• மந்திரிகுமாரி (1950)[1]

• பராசக்தி (1952)[2]

• திரும்பிப்பார் (1953)

• மனோகரா (1954)[3]

• அம்மையப்பன் (1954)[4]

• ராஜாராணி (1956)[5]

• புதுமைப்பித்தன் (1957)[6]

• காஞ்சித்தலைவன் (1963)

• பூம்புகார் (1964)

• கண்ணம்மா (1972)

• காலம்பதில்சொல்லும் (1980)

• இளைஞன் (2011)

• மண்ணின்மைந்தன்

• புதியபராசக்தி

• பாலைவனரோஜாக்கள்

• நீதிக்குதண்டனை

• பாசப்பறவைகள்

• பாடாததேனீக்கள்

• பாலைவனப்பூக்கள்

• உளியின்ஓசை

92 . திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்:

1. பணம் (1952)

2. எல்லாரும்இந்நாட்டுமன்னர் (1960)

93.வசனம் எழுதிய திரைப்படங்கள்

1. ராஜகுமாரி (1947)

2. மலைக்கள்ளன் (1954)

94.திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:

1. ஊருக்குஉழைப்பவண்டி - மந்திரிகுமாரி

2. இல்வாழ்வினிலேஒளி.. - பராசக்தி

3. பூமாலைநீயே - பராசக்தி

4. பேசும்யாழேபெண்மானே - நாம்

5. மணிப்புறாபுதுமணிப்புறா - ராஜாராணி

6. பூனைகண்ணைமூடி - ராஜாராணி

7. ஆயர்பாடிகண்ணாநீ - ரங்கோன்ராதா

8. பொதுநலம்என்றம் - ரங்கோன்ராதா

9. அலையிருக்குதுகடலிலே - குறவஞ்சி

10. வெல்கநாடுவெல்கநாடு - காஞ்சித்தலைவன்

11. ஒருவனுக்குஒருத்திஎன்ற - பூம்புகார்

12. கன்னம்கன்னம் - பூமாலை

13. காகிதஓடம் - மறக்கமுடியுமா

14. ஒண்ணுகொடுத்தா - மறக்கமுடியுமா

15. நெஞ்சுக்குநீதியும் - நெஞ்சுக்குநீதி

95.திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்:

பொன்னர்சங்கர் எனும் பெயரில் கலைஞர் எழுதிய நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர்சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H