தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் யோகா தினத்தை கல்வித் துறை வலியுறுத்தாதது
ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் கல்வித் துறை, சர்வதேச யோகா தினத்தை அரசுப் பள்ளிகளில் வலியுறுத்தாமல் விட்டது ஏன்?யோகக்
கலை, இந்திய நாடு உலகிற்கு அளித்த கொடை. இந்தியாவில் தோன்றிய பொக்கிஷம்.
உலகெங்கும் சுமார் 197 நாடுகளில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 87
நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படட்டது.
ஆனால், தமிழ்நாட்டில் யோகா தினத்தை அரசுப் பள்ளிகளில், அரசு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படவில்லை என்பது மன வருத்தம் தருகிறது.தலைவர்களுக்கு
நன்றி: யோகா தினத்தைக் கொண்டாடிய கர்நாடக முதல்வர், தில்லி முதல்வர்,
தமிழக எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி,
திமுக பொருளாளர் ஸ்டாலின், பாரிவேந்தர் உள்பட, தமிழகமெங்கும் கொண்டாடிய
பரந்த உள்ளங்களுக்கும், இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடிய நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி.
தன் நாட்டு மக்களுடன் உலக மக்களும், ஆரோக்கியமாக வாழ வேண்டும்
என்று செயல்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என்று தமிழிசை
சௌந்தரராஜன் கூறினார்.