கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக டீன் மகிமை ராஜா வெளியிட்டார்.
பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட 13
படிப்புகளில் 2,340 இடங்கள் உள்ளன. வேளாண் படிப்புக்கு மொத்தம் 2,340
இடங்களுக்கு 29 ஆயிரத்து 942 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி ராகவி தரவரிசைப்
பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டு மற்றும் மூன்று இடங்களை தலா
மூன்று மாணவர்கள் பிடித்துள்ளனர்.
கோவையில் வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு 27ம் தேதி
தொடங்க உள்ளது. ஜூன் 27-ல் சிறப்பு பிரிவினருக்கும் ஜூன் 29-ல்
பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.