பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238
மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல்
வெளியிடப்படுகிறது.
காலை 10 மணியளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 515 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் மட்டுமே சமர்ப்பித்தனர். இவர்களில் மாணவர்கள் 95,300 பேர், மாணவிகள் 58,938 பேர் ஆவர்.
இவர்களுக்கான
சமவாய்ப்பு எண் ஜூன் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில்
தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசை
பட்டியல் வெளியிடும்போது, எந்தெந்த தரவரிசைக்கு எப்போது கலந்தாய்வு
நடத்தப்படும் என்ற விவரங்களும் வெளியிடப்படும். மேலும், மாணவர்களுக்கு
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பும் பணியும் தொடங்கப்படும் என
பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.காலை 10 மணியளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.