எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப்
பிரிவினருக்கு உரிய அரசு மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவக் கல்வி தேர்வுக்
குழு வரையறுத்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய 68 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு (3 சதவீதம்) தகுதி பெறும் மாணவர்களுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து 20 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 4 அல்லது 3 இடங்கள் என ஒதுக்கப்படும்.
உடலுறுப்பு பாதிப்பின் விகிதத்தைப் பொருத்து "ரேங்க்' கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள்: இந்தப்
பிரிவில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி பெறும் 5 மாணவர்களுக்கு, அரசு
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி,
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி,
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில்
கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி ஒதுக்கப்படும்.மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய 68 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு (3 சதவீதம்) தகுதி பெறும் மாணவர்களுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து 20 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 4 அல்லது 3 இடங்கள் என ஒதுக்கப்படும்.
உடலுறுப்பு பாதிப்பின் விகிதத்தைப் பொருத்து "ரேங்க்' கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டுப் பிரிவு: விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ள "ரேங்க்' அடிப்படையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஏதாவது ஒரு கல்லூரி ஒதுக்கப்படும்.
பல் மருத்துவப் படிப்பு: பி.டி.எஸ். படிப்பில் சேர சென்னையில் மட்டுமே அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 பி.டி.எஸ். இடங்கள், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு ஒரு பி.டி.எஸ். இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.